Wednesday 24 April 2013

மின்சாரக் கட்டண உயர்வு அரசாங்கத்திற்கு எதிரான சதியா?


மின்சாரக் கட்டண உயர்வானது அரசாங்கத்திற்கு எதிரான சதித் திட்டமா என்பதனை ஆராயுமாறு முன்னாள் மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.
விசேட கடிதமொன்றின் மூலம் அவர் இதனைக் கோரியுள்ளார்.
வீட்டு பாவனையாளர்களின் மின்சாரக் கட்டணத்தை 35 வீதத்தினால் அதிகரித்து அதன் மூலம் மக்களுக்கம் அரசாங்கத்திற்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது.
நிதி அமைச்சின் செயலாளர் மின்சாரக் கட்டண உயர்வு குறித்த யோசனையை முன்வைத்திருந்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், இந்த யோசனையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பில் நான் எந்தவிதமான யோசனைத் திட்டங்களையும் முன்வைக்கவில்லை என சம்பிக்க ரணவக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு கொலை மிரட்டல்


முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், இரத்தினபுரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரசாந்த ஜயகொடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இனந்தெரியாத நபர்கள் தொலைபேசி மூலம் பிரசாந்த ஜயகொடி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டல் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளின் பாதுகாப்புடன் ரத்தினபுரி நகரில் இயங்கி வந்த இரவு நேர களியாட்ட விடுதி மற்றும் கரோக்கே ஒன்றை சுற்றி வளைத்ததன் காரணமாக இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி நேரடியாகவே இந்த சுற்றி வளைப்பில் ஈடுபட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வாகன விபத்தில் புத்தளம் பிரதேச சபைத் தலைவர் பலி


புத்தளம் பிரதேச சபையின் தலைவர் டியுலுக் ரிசார பத்திரகே இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
காவற்துறை ஊடக மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிலாபம் - பெதுருஓய பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அவர் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க மீது ஆளும் கட்சியினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு


மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நேற்று பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது அரசாங்க தரப்பினர் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நேற்று மின்சார கட்டண அதிகரிப்பை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தியது.
இதன் போது அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் ரஞ்சன் ராமநாயக மீது போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக தொடர்ந்து பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்துக்கு வெளியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஈதலய மற்றும் கிந்த சிங்கள சஞ்சியின் ஆசிரியரின் வீட்டை காவற்றுறையினர் சோதனை


ஈதலய மற்றும் கிந்தர ஆகிய சிங்கள சஞ்சிகைகளின் பிரதான ஆசிரியர் சிரிலால் பிரியந்தவின் வீடு நேற்றைய தினம் காவற்துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக காவற்துறையினர் தம்மை கைது செய்யவே வந்ததாகவும், எனினும் பின்னர் தம்மிடம் வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டு, வீட்டினை சோதனைக்கு உட்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன காவற்துறை தலைமையகத்தின் சில முக்கிய ஆவணங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் சிரிலால் தெரிவித்துள்ளார்.
எனினும் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் காவற்துறையினரால் எதனையும் கைப்பற்ற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் இலங்கை தொடர்பான நிலைப்பாடு சமனிலையற்றது: அரசாங்கம்


இலங்கை தொடர்பான அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை சமநிலை அற்றதாக இருப்பதாக இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
போர்ப்ஸ் சஞ்சிகைக்கு அவர் எழுதியுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபான்மை மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது.
எனினும் மறுசீரமைப்பு விடயத்தில் ஏற்கனவே இலங்கை மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்கா அவதானம் செலுத்தவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, பொருளாதார ரீதியாக மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நாடு என்ற அடிப்படையில், இலங்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்க மறுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் தலைநகரில் குப்பை அள்ளும் அமெரிக்கத் தூதர்


கொழும்பில் காலிமுகத்திடல் கடற்கரையில் அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்ட உலக பூமி தினத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க தூதரகம் ஈடுபட்டது.
அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன்,  தூதரகப் பணியாளர்களுடன் இணைந்து காலிமுகத்திடல் கடற்கரையில் கிடந்த குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

நீதிசேவை ஆணைக்குழுவினால் நீதவான்கள் இடமாற்றம்


நீதிசேவை ஆணைக்குழுவினால் நீதவான் நீதிமன்ற நீதிபதிகள் பல பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வருடாந்த இடமாற்றம் என்ற அடிப்படையில் எதிர்வரும் மே 2ம் திகதி முதல் இந்த இடமாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் நீதிச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மன்னார் நீதவான் ஏ.பி.யூட்சன் கல்முனை நீதவான் நீதிமன்றத்திற்கும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வான் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், சம்மாந்துறை நீதவான் செல்வி ஏ.கனகரட்னம் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கும் மட்டக்களப்பு மேதிக நீதவான் கே.கருணாகரன் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்திற்கும் வாழைச்சேனை நீதவான் எம்.ஏ.றியாழ் மட்டக்களப்பு மேதிக நீதவானகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய வீசா விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்கலாம்


இணையத்தின் ஊடாக பிரித்தானிய வீசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி முதல் பிரித்தானியாவிற்கான சகல வீசா விண்ணப்பங்களும் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இனி வரும் காலங்களில் கையெழுத்து மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளது.
வீசா விண்ணப்பத்திற்கான நேர்முகத் தேர்வின் விண்ணப்பங்களை கணனிப் பிரதி எடுத்துக் கொண்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் ஏர்த்தில் Leap Motion Controller

உலகத்தின் அனைத்து பாங்களையும் ஒரே இடத்திலிருந்து பார்த்து அறிந்துகொள்ளும் கூகுளின் கூகுள் ஏர்த் சேவையில் முப்பரிமாண வடிவங்களைக் கட்டுப்படுத்தும் Leap Motion Controller தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
இதன் அடிப்படையில் இந்த வாரம் தொடக்கம் கூகுள் ஏர்த் சேவையை பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் Google Earth Pro 7.1 பதிப்பு மென்பொருளின் ஊடாக இவ்வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என Leap Motion நிறுவனம் தெரிவித்துள்ளது.
முப்பரிமாண வரைபடத்தினை துல்லியமாக காட்டும் வசதியும், அது தொடர்பான பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் வசதியும் Google Earth Pro 7.1 பதிப்பில் காணப்படுவதுடன் குறித்த முப்பரிமாண வரைபடங்களை பகிர்ந்துகொள்ளக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை தற்போது 199 டொலர்கள் எனும் சலுகை விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.

இளம்பெண்களுக்கான அவசியமான 10 பொழுதுபோக்குகள்

இயந்திரமயமான இவ்வுலகத்தில் படிப்பதும், வேலை செய்வது மட்டும் வாழ்க்கை என்ற நிலையில் ஒய்வுக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி பிடித்த பொழுது போக்கில் ஈடுபட்டால் உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும்.
இளம் பெண்களுக்கான சில பொதுவான மற்றும் அவசியமான பொழுதுபோக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றில் ஈடுபட்டு நேரத்தை சந்தோஷமாக கழியுங்கள்.
சமையல்
இது ஒரு பொழுதுபோக்கு மட்டும் அல்ல. உயிர் பிழைப்பதற்கான முக்கியமான தேவையும் கூட. உணவுக்காக பிறரை எதிர்பார்த்து எல்லா தருணங்களிலும் நம்மால் இருக்க முடியாது. ருசிக்காக இல்லாவிடிலும் பசிக்காக சமைக்க கற்றுக் கொள்ளலாம்.

பிரிட்டனில் குழந்தைகளுடன் பெண் தற்கொலை: முக்கிய தடயம் சிக்கியது

பிரிட்டன் தலைநகர் லண்டனில் குழந்தைகளுடன் மர்மமான முறையில் இறந்த பெண், தன் கணவருக்கு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனின் மிட்கிராப் ரூயிசிலிப் பள்ளி ஒன்றில் குஜராத்தை சேர்ந்த ஹீனா சோலங்கி(வயது 34) என்பவர் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இந்த மாதம் 12-ம் தேதி சோலங்கியும், அவரது பெண் குழந்தைகள் ஜேஸ்மின் 9, பிரிஷ் 4 ஆகிய மூவரும் இறந்து கிடந்தனர்.
கணவரின் பெற்றோர்கள் வெளியூர் சென்றிருந்த போது இச்சம்பவம் நடந்து இருந்தது. லேப் டெக்னீசியான அவர் தனது குழந்தைகளுடன் விஷமருந்து குடித்து இறந்தாரா? அல்லது கேஸ் கசிவு ஏற்பட்டு இறந்தனரா என்கிற கோணத்தில் ஸ்காட்லாண்டு பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இருந்தும், இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படமால் இருந்தது. இந்நிலையில், நடைபெற்று வந்த சோதனை குறித்து ஸ்காட்லாண்டு யார்டு பொலிசார் பேசினர்.

சவுதி சிறையில் இருந்த இலங்கையர் இருவரை காப்பாற்றிய அரேபிய குடிமகன்


சவுதி அரேபிய சிறையில் இருந்து இரு இலங்கைப் பணியளர்களை மீட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்ப சவுதி அரேபியர் ஒருவர் 22 ஆயிரம் சவுதி றியால்களை வழங்க முன்வந்துள்ளார்.
சவுதி அரேபிய வீடொன்றில் பணி புரிந்த இரு இலங்கையர்கள் தங்களது பணி இடத்திலிருந்து தப்பிச் சென்று சவுதி தூதரகத்தில் தஞ்சம் புகுந்து தம்மால் மீண்டும் பணிக்குச் செல்ல முடியாது என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து றியாத் பொலிஸார் விசாரணைகளை நடத்திய போதும் இவர்கள் இருவரும் பணி புரிந்த இடத்தை அடையாளம் காண முடியவில்லை.

எனினும் இவர்கள் சவுதியில் பணி புரிவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று பணிகளை செய்யத் தவறியதால் ஒவ்வொருவருக்கும் தலா 11,000 சவுதி றியால் அறவிடப்பட்டது.  அந்த பணத்தை செலுத்த முடியாது சிறையில் இருந்த நிலையிலேயே சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவரால் மீட்கப்பட்டுள்ளார்.

நாட்டைப் பிரிக்க புதிய தந்திரங்களைக் கையாளும் தமிழர்கள் - மஹிந்த ராஜபக்‌ஷ


ஆயுதங்களின் மூலம் நாட்டைப் பிரிக்க முடியாது என உணர்ந்த ஈழம் வாதிகள் நாட்டைப் பிரிப்பதற்கு புதிய தந்திரங்களைக் கையாள்வதாக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
பனாகொட இராணுவ தளத்தில் நேற்று, சிறிலங்கா இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவுக்கு விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தீவிரவாதத்தை உலகத்தில் இருந்து அழிப்பதற்கு, அதற்கு வெவ்வேறு அடைமொழிகளைக் கொடுப்பதை விட்டு விட்டு, அதன் இயல்பைப் புரிந்து கொண்டு உறுதியாகப் போரிட வேண்டும்.
தீவிரவாதத்தை தோற்கடித்த நாட்டின் தலைவர் என்ற வகையில், கூறுகிறேன், இந்த உண்மையை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.